அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கைக்கு PCR பரிசோதனை இயந்திரங்களை வழங்கியுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் PCR பரிசோதனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் நான்கு மாதிரிகளை சோதனை செய்யக்கூடிய திறன் கொண்டவையாக குறித்த இயந்திரங்கள் காணப்படுகின்றன.
அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குருப் கெப்டன் ஷொன் என்வின் கடற்படையினரிடம் பீசிஆர் பரிசோதனை உபகரணங்களை கையளித்துள்ளார்.