நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க அரச கம்பனியொன்றுக்கு அதிகாரம்..
Related Articles
நெடுங்சாலைகளை நிர்மாணிப்பதற்காக முற்றுமுழுதாக அரச கம்பனியாக நெடுஞ்சாலைகள் முதலீட்டு கம்பனியை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது திரைசேரிக்கு எவ்வித சுமையும் இன்றி இந்த முதலீட்டை மேற்கொள்வதே நோக்கம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
(மத்திய நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்தல், ருவன்புர நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தல் மற்றும் களனியில் இருந்து அத்துருகிரிய வரையிலான நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்தல் என்பவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. முற்றுமுழுதாக அரச கம்பனியொன்றை இதற்கென ஸ்தாபிப்பதற்கும் வருமானங்களை திரட்டி தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும் பூரண உரிமை அக்கம்பனிக்கு வழங்கப்படுகின்றது. விசேடமாக மிகவும் பெறுமதி வாய்ந்த காணிகளை 30 வருடகால குத்தகைக்கு விட்டு பெற்று கொள்ளப்படுகின்ற வருமானத்தின் மூலம் பங்களிப்பை பெற்று கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது திரைசேரிக்கு எவ்வித சுமையும் இன்றி எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.)
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின நிகழ்வை ஒழுங்கு செய்வதற்காக உப குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
(2021 பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள 73வது சுதந்திர தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்காக கீழ்குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சு உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, ஜனக்க பண்டார தென்னகோன், கெஹலிய ரம்புக்வெல்ல, சமல் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நகரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய நகரங்களிலும் வாகன தரிப்பிடங்களுக்காக கலப்பு திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் இதற்கென இனங்காணப்பட்டுள்ளன. பல்தேவை கட்டடங்களும், பல மாடி வாகன தரிப்பிடங்களையும் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. )
புலமைச் சொத்துக்கள் சட்டமூலத்தை மறுசீரமைக்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன விளக்கமளித்தார்.
(இலங்கைக்கு தனித்துவம் பெற்ற உற்பத்தி பொருட்களின் தரத்தை சர்வதேச ரீதியில் பேணுவதற்கு பூகோள குறிக்காட்டி ரீதியில் மேம்படுத்த தேவையான இனங்காணப்பட்டு இலங்கையின் வர்த்தக பெயர்களை பிரபல்யப்படுத்த தேவையான சட்டங்கள் மறுசீரமைக்கப்படும். சிலோன் டி, சிலோன் கருவா, சிலோன் மிளகு என்பனவற்றுக்கு சிறந்த மதிப்பு காணப்படுகின்றது. சர்வதேச ரீதியில் சிறந்த தனித்துவத்தை பெற்று கொள்வதற்கு பூகோள ரீதியிலான குறிகாட்டி மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். )