fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2020 12:26

பாகிஸ்தானிலிருந்து வருடாந்தம் 6ஆயிரம் தொன் பாஸ்மதி அரிசியினை நாட்டிற்கு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தான் இலங்கை வர்த்தக உடன்படிக்கையின் கீழ் குறித்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளது. கடந்த காலங்களில் குறித்த உடன்படிக்கையின் கீழ் அரிசி இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் பாஸ்மதி என்ற போர்வையில் வேறுவகையான அரிசியினை இறக்குமதி செய்து பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கம் வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் லங்கா சதொச நிறுவனம் ஆகிய நிறுவனங்களினூடாக மாத்திரம் குறித்த உடன்படிக்கையின் கீழ் பாஸ்மதி அரிசியினை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2020 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33