ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 38 வாகனங்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்காக வர்த்தக நிலையங்களை திறக்கமுடியுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
“தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், என்பவற்றை காலை 8 மணியிலிருந்து இரவு 8மணி வரை திறந்திருக்க முடியும். அந்த இடங்களில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கை கழுவுவதற்கான வசதி வாய்ப்புக்களும் உடல் வெப்பநிலையை அளவிடும் செயல்பாடும் முன்னெடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் பண பறிமாற்ற நடவடிக்கையின் போதும் பண அட்டைகளை பயன்படுத்தும் போதும் தன்னியக்க டெலர் இயந்திரங்களை பயன்படுத்தியவுடன் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். விசேடமாக நாணயத்தாள்கள் ஒரு கையிலிருந்து இன்னொரு கைகளுக்கு பரிமாற்றப்படுகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமாக இவ்வாறு பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. அது தொடர்பில் கவனம் செலுத்துங்கள். “