fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு…

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2020 12:37

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணியதாக கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நிதிமன்றம் அவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான குறித்த 13 பேரும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை.

இதன்போது விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்வரும் 26ம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் மொஹமட் மிஹார், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2020 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க