fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் காலை 8 மணிமுதல் திறப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2020 08:25

கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ளது. இன்றைய தினமும் குறித்த பகுதிகளிலுள்ள ஒசுசல, பல்ப்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளன.

இரவு 08.00 மணிவரை குறித்த வர்த்தக நிலையங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும். உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் வர்த்தக நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள. நடந்துசெல்லும் தூரத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு, வீடுகளிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்லமுடியும்.

வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2020 08:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க