பலாங்கொடை கல்தோட்டை பகுதியில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. கல்தோட்டை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை திம்புலாகல மகுல்தமன பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரியொருவர், காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெலிகந்த அசேலபுர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரென தெரியவந்துள்ளது. நேற்றிரவு விவசாய நிலத்திற்குள் புகுந்த யானையை விரட்ட முயன்றபோது அவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.