பெரு நாட்டில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயினை கட்டுப்படுத்த அந்நாட்டு தீயணைப்பு பிரிவினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரு நாட்டின் சாக்சயுவமான் தொல்லியல் பூங்காவிற்கு அருகில் தீப்பரவல் ஆரம்பித்துள்ளது. சுமார் 700 ஹெக்டர் பரப்பு வனப்பகுதி தீயில் கருகியுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவதை தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், தீயினை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரு நாட்டில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீ
படிக்க 0 நிமிடங்கள்