மாத்தளை பிரதேசத்தின் போதைப்பொருள் ராணியாக கருதப்படும் பேபி அக்கா உள்ளிட்ட மேலும் சந்தேக நபர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 8 கிராம் மற்றும் 650 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 75 ஆயிரம் ரூபா பணமும் இலத்திரனியல் தராசும் 6 ஏரிஎம். அட்டைகளும் 5 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாத்தளை களுதாவளை நரிக்கந்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர. மாத்தளை பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுரத்த பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.