கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மனநிலை பாதிப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளாhக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாடசாலை மாணவர்களும் பெண்ணொருவரும் தற்கொலை செய்து கொண்டவர்களில் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் ஜப்பானில் ஆயிரத்து 854 தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 15.4 வீத அதிகரிப்பு என புள்ளிவிபர தரவுகள் குறிப்பிடுகின்றன.
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், தொழில் வாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களினால் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.