தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு இராணுவத்தினரை இணைத்துக்கொள்ளாமை ராணுவ புலனாய்வு துறை வழங்கிய தகவல்களுக்கு முன்னுரிமை அளிக்காமை போன்றன ஈஸ்டர் தாக்குதலுக்கான காரணமென முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் யாழ்ப்பாணத்தில் கட்டளைத்தளபதியாக பணிபுரிந்த காலத்திலேயே சஹ்ரான் பற்றி அறிந்து வைத்திருந்ததாக முன்னாள் இராணுவத்தளபதி ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார். பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படாத போதிலும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பிளவு ஏற்பட்டிருந்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில் அவர் முதல் தடவையாக சாட்சியமளித்தார். முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்கா டுபாயில் உள்ள அல்லதா நகரின் லெவண்டர் ஹொட்டலின் 117 ம் இலக்க அறையிலிருந்து வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.
இலங்கை நேரப்படி பிற்பகல் 2.50 மணியளவில் மகேஸ் சேனாநாயக்கா சாட்சியமளிக்க ஆரம்பித்தார். நீங்கள் முதலில் ஐஎஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் தொடர்பாக எக்காலப்பகுதியில் அறிந்து வைத்தீர்கள், ஐஎஸ் வரைபடத்தில் இலங்கையும் ஒருபகுதியாக இருந்ததை நீங்கள் அறிவீர்களா என அரச சட்டத்தரணி வினவினார். அதற்கு பதிலளித்த மகேஸ் சேனாநாயக்க நான் 2010 ம் ஆண்டிலிருந்து டுபாயில் இருந்தேன். இதனால் லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் சம்பவங்களை அறிந்துவைத்திருந்தேன். இந்த பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இலங்கைக்கு முகம் கொடுக்கலாமென்பதை நான் அறிந்து வைத்திருந்தேன். நான் இராணுவத்தளபதி ஆனாவுடன் ஐ.எஸ் வரைபடத்தில் ஒரு பகுதியாக் இலங்கையும் வரைபடத்தை நான் அறிந்து கொண்டேன்.
இதனால் இலங்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதையும் தீவிரவாத கருத்துக்களை கொண்ட அமைப்புக்கள் இலங்கையில் இருப்பதையும் 2015 ம் ஆண்டு நான் மீண்டும் அறிந்துகொண்டேன் என தெரிவித்தார். சஹ்ரான் ஹாசிம் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பற்றி நீங்கள் அறிந்து வைத்தீர்களா என அரச சட்டத்தரணி வினவினார். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபை அது பற்றி என்னை அறிவுறுத்தியிருந்தது.
மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தியமை வனாத்தவில்லுவ வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை ஆகியவற்றுடன் சஹ்ரான் ஹாசிம் தொடர்புபட்டிருந்தமையும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பல ஆண்டுகளக்கு முன்னரே இராணுவ புலனாய்வு பணிப்பாளரினால் பாதுகாப்பு கவுன்சிலிலும் புலனாய்வு இணைப்பு குழு கூட்டங்களிலும் விளக்கமளித்திருந்தார்.
அத்தோடு சஹ்ரான் ஹாசிமிற்கு படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவர் உதவியதாக இராணுவப் புலுனாய் பிரிவுக்கு கிடைத்த தகவல் குறித்தும் நாம், தேசிய புலனாய்வு பிரிவு தலைவரை அறிவுறுத்தினோம். சட்டங்களை நிலைநிறுத்த அதிகாரம் கொண்ட நிறுவனங்கள் அதனை செய்யும் என நாம் எதிர்பார்தோம் என மகேஸ் சேனாநாயக்க கூறினார். அரச புலனாய்வு சேவைக்கும் இராணுவ புலனாய்வு பிரிவிக்கும் இடையில் தகவல்களை வழங்குவதில் போட்டி இருந்ததா என அரச சட்டத்தரணி வினவிய போது அது உலகில் உள்ள பொதுவான நிலையென்றும். எமது அரச புலனாய்வு சேவைக்கு, இராணுவ புலனாய்வு சேவைக்கும் இடையில் நான் அதனை அவதானித்தேன். நான் நினைக்கும் விதத்தில் அந்த போட்டி உரிய விதத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் போனதாகவும் மகேஸ் சேனாநாயக்கா ஆணைக்குழுவில் தெரிவித்தார்.
அரச சட்டத்தரணி தொடர்ந்து கேள்வி எழுப்புகையில் இதுதொடர்பாக உங்களது கண்காணிப்பு அதிகாரியை அறிவுறத்தினீர்களா என வினவினார். அதற்கு பதிலளித்த மகேஸ் சேனாநாயக்க, நான் அப்போது பாதுகாப்பு செயலாளர்களாக பணிபுரிந்த கபில வைத்தியரத்ன, ஹேமசிறிபெர்னாண்டோ ஆகியோருக்கு புலனாய்வு துறை ஒருங்கிணைப்புடன் செயற்படுவதில்லை என்ற விடயத்தை கூறினேன். அதுபற்றி பேசுவோம் என கூறிய போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை. தீவிரவாதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இராணுவப் புலனாய்வு துறைக்கும் பொலிஸ் திணைக்களத்துடன் இருந்த விசேட பணியகத்திற்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. பொலிஸ் திணைக்களத்தின் விசேட பணியகத்துடன் பிரச்சினைகள் ஏற்பட்டன. சி.ஐ.டியினர் அவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்தினர். அதற்கு ஒரு உதாரணத்தையும் கூற முடியும். வனாத்தவில்லுவ வெடி பொருட்கள் கண்ணெடுக்கப்பட்ட தகவல்களையும் நாம் அவர்களிடம் பகிர்ந்து கொண்டோம்.
அதன்பின்னர் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இராணுவத்தினருக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதுபோன்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இராணுவத்தினருக்கு விசேட திறமை உண்டு. அந்த விசாரணையோடு இணைந்துகொள்ள எமக்கு வாய்ப்பு தாருங்கள் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் வேண்டுகோள் விடுத்தேன எனினும் எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
மாவனெல்லையில் புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ எமது அதிகாரிகள் சென்ற போது உதவி அவசியமில்லையென கம்பளை பொலிஸார் இராணுவத்தினரை துரத்தியுள்ளனர். எம்மை இதுபோன்ற விசாரணைகளில் தொடர்புபடுத்தாமல் இருந்தாமையினால் நாடு இதுபோன்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது. எமக்கு எவரையும் கைதுசெய்யும் அதிகாரம் இல்லை. நாம் தொடர்ந்தும் தகவல்களை வழங்கி வந்தோம்.
நாம் வழங்கிய தகவல்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவின் ரவி செனவிரத்ன, நாலக்க டி சில்வா, வருண ஜயசுந்தர, நிலந்த ஜயவர்த்தன, சிசிர மென்டிஸ் ஆகியோர் முன்னுரிமை அளிக்கவில்லை. நாம் வழங்கிய தகவல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பாடமையே தாக்குதலுக்கான பிரதான காரணமாகும். அரச சட்டத்தரணி தொடர்ந்து கேள்வி எழுப்புகையில் 2018 ம் ஆண்டு ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பொலிஸ் மா அதிபரும் பூஜித் ஜயசுந்தரவுக்கும் இடையே அலுவலக ரீதியான உறவுகள் எவ்வாறு இருந்ததை நீங்கள் அவதானித்தீர்களா என அரச சட்டத்தரண வினவினார். அதற்கு பதிலளித்த மகேஸ் சேனாநாயக்க ஜனாதிபதியிடம் எனக்கு இருந்த அதிகாரம் பூஜித்திற்கு இருக்கவில்லை.
2018 ம் ஆண்டு நடுப்பகுதியில் அவர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றதை அவதானித்தேன். அப்போது ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக செய்தி பரவியது. அத்தோடு நாம் கேள்வியுறாத சில நபர்கள் வெளியே வந்து ஊடக கண்காட்சியை நடத்த ஆரம்பித்ததாக அவர் தெரிவித்தார். ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி கேள்வி எழுப்புகையில் நாமல் குமாரவின் பின்னணியில் இருந்த நபர் அல்லது நிறுவனம் பற்றி அறிவீர்களா என வினவியபோது நிறுவனம் என்ற வகையில் பொலிஸ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு என்றும். நபர்கள் என்ற வகையில் அப்பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா என்றும் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதலில் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் என அரச சட்டத்தரணி வினவினார். அதற்கு பதிலளதித் மகேஸ் சேனாநாயக்க இராணுவத் தலைமைக எல்லையில் சங்கிரில்லா ஹொட்டல் அமைந்துள்ளது. வெடிச்சம்பவம் தொடர்பாக உடன் அறிந்துகொண்டடோம். பின்னர் கிங்ஸ்பெரி ஹொட்டலில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்டோம். பின்னர் சஹ்ரான் உள்ளிட்ட தாக்குதல் என்பதை அறிந்துகொண்டோம். எமது புலனாய்வு துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தகவலை பெற்றுக்கொண்டோம். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தாத போதிலும் புலனாய்வு அதிகாரிகளுக்கு கைதுசெய்வதற்கான அனுமதியை வழங்கினேன் என்றும் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார்.