fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2020 13:15

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு பெரும்போக நெற் செய்கைக்கு அரசாங்கத்தினால், விவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு வெள்ளாவெளி பிரதேசத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உர விநியோகம், இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினிகள் சட்ட ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் வழிக்காட்டலில் வெள்ளாவெளி கமநல சேவை மத்திய நிலையத்தில் உர விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மாவட்டஅரச அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இலவச உர மானிய விநியோகத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மற்றும் தேசிய உர செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய உர செயலகத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.எஸ்.எம். சிராஜூடின் கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் வெள்ளாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2020 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33