போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர் உதார சத்துரங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மெஜிஸ்ரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பொலிஸ் உதார சத்துரங்க சார்பில் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில் இதற்கான கோரிக்கை விடுத்துள்ளார். தமது கட்சிக்காரர் சுமார் 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.
சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் என்றும் அவர் இதுவரை சந்தேக நபராக குறிப்பிடப்படவில்லையென்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் இக்கோரிக்கையை நிராகரித்தார்.