சமூக வலைத்தளங்கள் ஊடாக கஞ்சா செய்கையை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக பிரதமர் கடும் தீர்மானம்
Related Articles
இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி கஞ்சா செய்கையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண
ஆளும் தரப்பின், அமைச்சர் ஒருவர் கஞ்சா அல்லது அதுதொடர்பான கருத்துக்களை தெரிவிக்கும் போது அரசாங்கத்தின், கருத்தாக அது சமூக வலைத்தளங்களில் இடம்பெறுகின்றது. இது தொடர்பாக தீவிரமாக ஆராயும் வரை இது குறித்து கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டால், எதிர்கால பரம்பரையினருக்கும் சிறந்ததென கருதுகிறேன்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ :
“‘புகைத்தல், மற்றும் போதைப்பொருள் முழு உலகத்தையும் ஆட்டிப் படைக்கிறது. எவ்வாறாயினும் சுகாதார மற்றும் பொருளாதார நிலைமைகளை கொண்டு தற்போதய சமூகம் இவற்றிலிருந்து ஒதுங்கி வருகிறது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். எனினும் தற்போது இணையத்தளம் அல்லது சமூக வலைத்தளங்களில் கஞ்சா செய்கை தொடர்பாக அதனை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் மத்தியில் இதனை பிரபல்யப்படுத்தும் வகையில் ஒரு சில தொழில்சார் நிபுணர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கஞ்சா செய்கையை மேற்கொள்ள எந்தவொரு நிறுவனத்த்pற்கும் அனுமதி வழங்கப்பட்டில்லை. இலங்கையில் கஞ்சா செய்கையை மேற்கொள்ளவோ அதனுடன் சார்புடைய உற்பத்திகளை மேற்கொள்ளவோ இதன் மூலம் ஏற்படுகின்ற விபரீதங்களை கண்டறிவதற்கு புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.’