5 வருடங்களுக்கு பின்னர் விவசாய பொருட்களை எடுத்துச்செல்வதற்கு புகையிரத சேவையை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
5 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் விவசாய உற்பத்திகள் , தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதி பயிர்கள் உட்பட எரிபொருட்களும் புகையிரத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. தற்போது அந்நடவடிக்கைகள் நெடுஞ்சாலைகள் ஊடாக மேற்கொள்ளப்படுவதனால் போக்குவரத்து செலவீனங்கள் அதிகரித்துள்ளன.
வாகன நெரிசல், சுற்றாடல் மாசடைதல் மற்றும் விவசாய உற்பத்திகளுக்கும் இதனால் சேதமேற்படுகிறது. இதற்கு தீர்வாக, விவசாய உற்பத்திகளை எடுத்துச்செல்வதற்கு புகையிரத சேவையைப் பயன்படுத்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது. மீன்களை எடுத்துச் செல்வதற்கு புகையிரத பெட்டிற்குள் அதி குளிரூட்டி வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உரத்தை எடுத்துச்செல்வதற்காகவும் ஆண்டு ஒன்றுக்கு 650 மில்லியன் ரூபா செலவாகின்றது. புகையிரதங்கள் பயன்படுத்தப்படுவதால் இதனை 50 சதவீதத்தினால் குறைத்துக்கொள்ள முடிவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.