வகுப்பொன்றில் இருக்க வேண்டிய உயர்ந்த பட்ச மாணவர்களின் எண்ணிக்கை..
Related Articles
பாடசாலையில் வகுப்பொன்றில் இருக்க வேண்டிய உயர்ந்த பட்ச மாணவர்களின் எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதுவரை காணப்பட்ட 35 மாணவர்கள் என்ற வரையறையை முகாமைத்துவ படுத்துவதில் சமூக பிரச்சினையாக மாறியுள்ளதனால் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது குறித்து கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ள கோரிக்கையானது. தற்போது 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இச்சகல விடயங்களையும் அடிப்படையாக கொண்டு வகுப்பறை ஒன்றில் இருக்க வேண்டிய உயர்ந்த பட்ச மாணவர்களின் எண்ணிக்கையை 45 வரை உயர்த்த தீர்மானிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.