முகக்கவசம் இன்றி பஸ்ஸில் பயணிப்பதற்கு அனுமதி மறுப்பு
Related Articles
முகக்கவசம் இன்றி பஸ் வண்டிகளில் பயணிப்பதற்கு பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்களென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கு தனியார் பஸ் இயக்குனர்களுக்கு உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வழங்கப்படவில்லையென சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் பஸ் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அசௌகரியங்கள் இன்றி சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய பயணிகள் பஸ் வண்டிகளில் பயணிக்க முடியுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.