fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினத்துடன் நிறைவு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2020 12:44

20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினத்துடன் நிறைவு

20வது அரசியல் திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நான்காவது நாளாக இன்றைய தினமும் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினத்துடன் மனுக்கள் மீதான விசாரணை நிறைவு செய்யப்படவுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய நாளைய தினம் மனு மீதான பரிசீலனை குறித்து எழுத்து மூலமான விரிவுரைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இதனையடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2020 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க