fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீர்கொழும்பு கடலில் மாயமான இளைஞர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2020 13:32

நீர்கொழும்பு கடலில் மாயமான இளைஞர்களை தேடும் பணிகள்  தொடர்ந்தும் முன்னெடுப்பு…

நீர்கொழும்பு கடலில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள் மூவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன இளைஞர்களில் இருவர் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை, ஸ்டேலின் தோட்டத்தை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடையவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றைய இளைஞர் பதுளை நமுனுகல பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர்கள் கொழும்பில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலைப்புரியும் சந்தரப்பத்திலேயே நேற்று மாலை நீராடுவதற்கென நண்பர்களுடன் கடலுக்கு சென்றுள்ளனர். இதன் போது திடீரென இளைஞர்கள் மூவரும் அலையில் சிக்குண்டு கடலுக்கு இழுத்துசெல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். காணாமல் போவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும், சுழியோடிகளும் ஈடுப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2020 13:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க