fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பில் வாடகை கார்களை கொள்வனவு செய்து யாழில் விற்பனை செய்யும் மோசடி அம்பலம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2020 13:24

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாகன மோசடி தொடர்பில் பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வாடகை அடிப்படையில் கார்களை கொள்வனவு செய்து அவற்றை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்து வாகன மோசடியில் ஈடுபட்டு வந்த நபரொருவர் அண்மையில் நெல்லியடி பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய வாகன மோசடி தொடர்பான மேலும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக நெல்லியடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் யாழ் மக்கள் குறித்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2020 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க