fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியின் கருணையில் பரிசு பெற்ற நாட்டின் பிள்ளைகள்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 18:09

சகல பாடசாலைகளுக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் ஊடாக மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை வளர்க்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஐந்து மாவட்டங்களின் பாடசாலைகளுக்காக நூலகங்களை கையளிப்பதற்காக உலக சிறுவர் தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

உலக சிறுவர் தினம் கொண்டாடப்படும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாசிப்பு மாதமும் ஆரம்பமாகின்றது. எதிர்கால சந்ததியினரை புத்தகங்களுடன் இணைக்கும் வகையில் உலக சிறுவர் தினத்துக்கு இணைவாக ஐந்து பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு இன்று காலை ஜனாதிபதியினால் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அடையாள நிமித்தமாக நூலகங்கள் கையளிக்கப்பட்டன. புத்தளம் லுனுவில அநுருத்த மத்திய மகா வித்தியாலயம், கம்பளை தொலஸ்பாகே கனிஸ்ட வித்தியாலயம், தர்மபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலை, குருவிட்ட விஜயகுமாரதுங்க வித்தியாலயம், காலி பிலான ஆகிய கல்லூரிகளுக்காக அடையாள நிமித்தம் நூலகங்கள் கையளிக்கப்பட்டன. பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட பழைய பஸ் வண்டிகள் மாணவர்களை கவரும் வகையில் நூலகங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முழுமையான ஒரு நூலகத்துக்காக ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மொபிடல் நிறுவனம், இலத்திரனியல் நூலக வசதிகளை வழங்கியுள்ளதுடன், மாணவர்களுக்கு இலத்திரனியல் நூல்களை பெற்று கொள்வதற்கான வாய்ப்பும் இதன் ஊடாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இபோச, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடல், மனுசத்தெரண மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவண பணியகம் இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளது. சர்வதேச புத்தக கண்காட்சியின் போது வெளியீட்டாளர்களினால் கையளிக்கப்பட்ட ஒரு தொகுதி நூல்களும் இங்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுடன் நூல்கள் தொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொண்ட ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தை பார்வையிடும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2020 18:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க