மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இன்று காலை 5 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 163 சந்தேக நபர்கள் ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு கிலோ மற்றும் 312 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும்
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 103 பேரும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 88 பேரும் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருள் மற்றும் கோடாவுடன் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.