நிர்க்கதியாகியிருந்த மேலும் 640 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு வருகை..

நிர்க்கதியாகியிருந்த மேலும் 640 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு வருகை.. 0

🕔14:03, 1.செப் 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 640 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். கட்டாரிலிருந்து 59 பேரும், குவைட்டிலிருந்து 293 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திற்கு தொழிலுக்கென சென்ற 288 பேரும் இன்று நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். அதில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

Read Full Article
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்…

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்… 0

🕔12:24, 1.செப் 2020

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நுகர்வோர் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுருத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியால நீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்படலாம் அல்லுது குறைந்த அலுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Read Full Article
இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம்.. அதிக வெப்பம் காரணமாக கண்களுக்கு பாதிப்பு

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம்.. அதிக வெப்பம் காரணமாக கண்களுக்கு பாதிப்பு 0

🕔12:19, 1.செப் 2020

சூரியனின் தென்திசை நோக்கிய நகர்வு காரணமாக இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இன்றைய தினம் மதியம் 12.10 மணியளவில் நொச்சியாகம, யாலேகம, கல்குளம், பியம்பலேவ, நித்துல்கொல்லேவ மற்றும் வெருகல் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இதேவேளை தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கண்களுக்கு பாதிக்கக்கூடுமென கண்நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்

Read Full Article
இந்திய முன்னாள் ஜனாதிபதியின் இறுதி கிரியைகள் இன்று…

இந்திய முன்னாள் ஜனாதிபதியின் இறுதி கிரியைகள் இன்று… 0

🕔12:19, 1.செப் 2020

மறைந்த தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானார். அவரது மறைவையடுத்து இந்தியாவில் எதிர்வரும் 6ம் திகதி வரை இந்தியாவில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதோடு, முக்கிய பல நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று

Read Full Article
சில பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழை

சில பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழை 0

🕔12:18, 1.செப் 2020

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

Read Full Article
குறை வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு  தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

குறை வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம் 0

🕔12:14, 1.செப் 2020

குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. வறுமையை ஒழிக்கும் நோக்கில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை சார் அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானம் பெறும் மற்றும் கல்வியில் தேர்ச்சிப்பெறாதவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதே வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

Read Full Article
444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை 0

🕔11:57, 1.செப் 2020

சிறைச்சாலைகளிலுள்ள 444 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 29 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகிள் விடுதலைசெய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளிலுள்ள நெருக்கடியை குறைக்கும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறு தவறுகள் தொடர்பில் சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்கென தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Read Full Article
நாட்டில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,049 ஆக உயர்வு

நாட்டில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,049 ஆக உயர்வு 0

🕔11:55, 1.செப் 2020 Read Full Article
தலதா மாளிகை உத்தியோகபூர்வ இணைத்தளத்தின் மீது இரு சைபர் தாக்குதல்கள்

தலதா மாளிகை உத்தியோகபூர்வ இணைத்தளத்தின் மீது இரு சைபர் தாக்குதல்கள் 0

🕔10:15, 1.செப் 2020

கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகை உத்தியோகபூர்வ இணைத்தளத்தின் மீது இரு சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் தற்போது இவ்விணையத்தளம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தலதாமாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது நேற்றைய தினம் இரு சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் ஊடாக நைஜீரியாவிலிருந்து ஹெக்கர்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. கடந்த

Read Full Article

Default