நாவலப்பிட்டி பிரதான வீதியின் ஒரு பகுதியில் மண்சரிவு

நாவலப்பிட்டி பிரதான வீதியின் ஒரு பகுதியில் மண்சரிவு 0

🕔12:56, 30.செப் 2020

கினிக்தேனை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் ஒரு பகுதி பாதுகாப்பு வேலியுடன் மண்சரிவுக்குள்ளாகியுள்ளது. அபுகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட வீதியே இவ்வாறு மண்சரிவுக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தொடர்ந்தும் அப்பகுதியில் மண் சரிவு அபாயம் நிலவுவதால் போக்குவரத்தானது ஒருமருங்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தின் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கினிக்தேனை பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Read Full Article
மாத்தறையில் காணாமல் போன தெனியாய மாணவி குறித்து தீவிர விசாரணை….

மாத்தறையில் காணாமல் போன தெனியாய மாணவி குறித்து தீவிர விசாரணை…. 0

🕔12:50, 30.செப் 2020

தெனியாய – இந்துரதெனிய பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மாத்தறை பகுதியில் காணாமல் போன சந்தர்ப்பம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இம்மாணவியின் தொலைபேசி தொடர்பு குறித்து இதன்போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தான் கையடக்கதொலைபேசியை செயலிழக்க செய்துவிட்டு, பெண் பௌத்த துறவிகள் இருக்குமிடத்திற்கு செல்ல போவதாக குறித்த

Read Full Article
தபால்துறையை பொருளாதாரத்தின் பங்காளியாக மாற்ற முடியுமென ஜனாதிபதி தெரிவிப்பு

தபால்துறையை பொருளாதாரத்தின் பங்காளியாக மாற்ற முடியுமென ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔12:47, 30.செப் 2020

தபால்துறை தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்காளியாக மாற்றமுடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய தொழில்நுட்ப முறைகளை கையாண்டு பல புதிய பரிமாணங்களை தபால் சேவைகள் ஊடாக புகுத்தி தபால்துறையை உலக தரம் வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். தபால் சேவைகள், வெகுசன ஊடகவியலாளர்கள், தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால

Read Full Article
ட்ரம்ப் – பைடன் ஆகியோருக்கு இடையில் பரபரப்பு விவாதம்

ட்ரம்ப் – பைடன் ஆகியோருக்கு இடையில் பரபரப்பு விவாதம் 0

🕔12:37, 30.செப் 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பிரதான இரு வேட்பாளர்களான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான முதலாவது உரையாடல் நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று பரவல், உச்சநீதிமன்றத்தின் வெற்றிடங்களை நிரப்புதல், கறுப்பு இனத்தவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி, மற்றும் சுகாதார கட்டமைப்பு குறித்து இருவரும் தர்க்கம் புரிந்ததை நேரடி ஒளிபரப்பின்

Read Full Article
விமானசேவையில் ஈடுபட்டிருந்த மேலும் ஆயிரக்கணக்கானோர் தமது தொழிலை இழக்கும் அச்சுறுத்தல்

விமானசேவையில் ஈடுபட்டிருந்த மேலும் ஆயிரக்கணக்கானோர் தமது தொழிலை இழக்கும் அச்சுறுத்தல் 0

🕔12:28, 30.செப் 2020

விமானசேவையில் ஈடுபட்டிருந்த மேலும் ஆயிரக்கணக்கானோர் தமது தொழிலை இழக்கும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கம்பனி தெரிவித்துள்ளது. தற்போது உலகின் முன்னணி விமானக் கம்பனியினால் பல்லாயிரக்கணக்கானோர் தொழில் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று பரவல் காரணமாக நஸ்டத்திலுள்ள விமான சேவைகள் தமது நாளாந்த செலவீனத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்கு கூட வருமானம்

Read Full Article
குவைத்தின் மன்னர் செய்க் சபா அல் அஹமட் அல் சபா நேற்று  காலமானார்..

குவைத்தின் மன்னர் செய்க் சபா அல் அஹமட் அல் சபா நேற்று காலமானார்.. 0

🕔12:22, 30.செப் 2020

குவைத்தின் மன்னராக செயற்படுகின்ற செய்க் சபா அல் அஹமட் அல் சபா நேற்று தனது 91 ஆவது வயதில் காலமானார். செய்க் சபா 2006 ம் ஆண்டு முதல் குவைத்தை நிர்வகித்துள்ளதுடன் அமெரிக்க சார்பான கொள்கையின் கீழ் தனது கொள்கைகளை அமுல்படுத்தினார். முடிசூடவுள்ள அவரது சகோதரரான செய்க் நவாப் அல் அகமட் அல் சபா அடுத்த

Read Full Article
நல்லாட்சியின் போது தொழிற்பயிற்சி அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து முறைப்பாடு

நல்லாட்சியின் போது தொழிற்பயிற்சி அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து முறைப்பாடு 0

🕔12:20, 30.செப் 2020

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலேயே இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வர்த்தக கைத்தொழில் மற்றும் சேவை முற்போக்கு ஊழியர் சங்க கிளை அதிகாரிகளே இம்முறைப்பாட்டை செய்துள்ளனர்.  

Read Full Article
களனிவெளி புகையிரத வீதியின் சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு புதிய வீடுகள்

களனிவெளி புகையிரத வீதியின் சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு புதிய வீடுகள் 0

🕔12:20, 30.செப் 2020

களனிவெளி புகையிரத வீதியில் சட்டவிரோத குடியேற்றக் காரர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு நகரை அண்டிய பகுதிகளிலுள்ள புகையிரத வீதிகளை விஸ்த்தரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைய இச்சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நீக்கப்பட்டனர். களனிவெளி புகையிரத வீதியின் இருமருங்கிலும் வசித்து வந்தவர்களுக்காக ஆயிரத்து 244 வீடுகளை நிர்மாணிக்கும்

Read Full Article
தணமல்வில பகுதியில் கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் கைது

தணமல்வில பகுதியில் கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் கைது 0

🕔12:14, 30.செப் 2020

தணமல்வில அம்பேகமுவ பகுதியில் கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். உலர்த்திய 50 கிலோகிராமும் 500 கிராம் கஞ்சாவுடன் ஒளடதம் கலந்த 23 கிலோ தூள்களும் சந்தேக நபரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டன.

Read Full Article
மத்திய நெடுஞ்சாலையின் மீரிகம – குருநாகல் நிர்மாணப் பகுதிகளை 5 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய அமைச்சர் ஜோன்ஸ்டன் தயார்..

மத்திய நெடுஞ்சாலையின் மீரிகம – குருநாகல் நிர்மாணப் பகுதிகளை 5 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய அமைச்சர் ஜோன்ஸ்டன் தயார்.. 0

🕔12:14, 30.செப் 2020

மத்திய நெடுஞ்சாலையின் மீரிகமயிலிருந்து குருநாகல் வரையான நிர்மாணப் பணிகள் அடுத்துவரும் 5 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்ட்ன பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை உடஹமுல்லையிலிருந்து மாதிவெல வரையான வீதியின் நிர்மாணப்பணிகளும் 10 வேலை நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். உடஹமுல்லையிலிருந்து மாதிவெல வரையான வீதியின் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டபோதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

Read Full Article

Default