fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் கல்வி துறையை சர்வதேச தரத்துக்கு முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரதமர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:21

நாட்டின் கல்வி துறையை சர்வதேச தரத்துக்கு முன்னெடுப்பதே அரசாங்கத்தின் தலையாய நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் ஏனைய புற செயற்பாடுகள் இணைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். கல்வி மற்றும் ஏனைய விடயங்களில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பிரதமர் பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்து கல்லூரியின் சஞ்சிகையும் நினைவுச் சின்னமும் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

“கல்வி எவராலும் அழிக்ககூடிய ஒன்றல்ல. எவராலும் அதனை திருடவும் முடியாது. கல்வியை சர்வதேச தரத்துக்கு முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும். எமது நாட்டின் கல்வி துறையை மேலோங்கச் செய்வதற்கு நாம் திட்டங்களை வகுத்துள்ளோம். கொவிட் 19 ஒரு சர்வதேச சவாலாக மாறியுள்ளது. இவை உங்களது கல்விக்கு பாதிப்பாக அமையக்கூடாது. கொரோனா காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக பிள்ளைகளின் குரலுக்கு நாம் செவிமடுத்தோம். விரைவில் பாடசாலைகளை திறக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக கூடிய கவனம் செலுத்தினோம். நாளைய எமது நாட்டின் தலைவர்கள் என்ற வகையில் இந்த நாட்டை சுபீட்சமாக முன்னெடுப்பதற்கு நீங்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.”

இதேநேரம் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை வரவழைப்போர் சங்கத்தின் 40வது வருடாந்த ஒன்றுகூடலிலும் பிரதமர் கலந்து கொண்டார். சங்கத்தின் புதிய தலைவராக திலக் வீரசிங்க நியமிக்கப்பட்டார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க