fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மறைந்த பிரபல கலைஞர் டெனிசன் குரேவின் பூதவுடலுக்கு பிரதமர் அஞ்சலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:19

மறைந்த பிரபல கலைஞர் டெனிசன் குரேவின் பூதவுடலுக்கு பிரதமர் அஞ்சலி

பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய மறைந்த பிரபல கலைஞர் டெனிசன் குரேவின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி கிரியைகள் மொரட்டுமுல்லை மெதடிஸ்ட தேவாலய மைதானத்தில் நாளை பிற்பகல் இடம்பெறும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 68வது வயதில் அவர் காலமானார். 1986ம் ஆண்டு கெரலிகாரயோ திரைப்படத்தின் ஊடாக அவர் திரைப்பட துறையில் கால்பதித்தார். திரைப்பட பிரதியாக்கம், நடிப்பு உள்ளிட்ட பல துறைகளில் திறமை காட்டிய அவர் இரசிகர்களின் பேரபிமானத்தை பெற்ற ஒரு கலைஞர் ஆவார். அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மொரட்டுமுல்ல வில்ரோவத்த இல்லத்துக்கு சென்ற பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹன உள்ளிட்ட பெருமளவிலான கலைஞர்களும் பொது மக்களும் அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க