fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

20ற்கு எதிராக 39 மனுக்கள்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:06

20வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

20 வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்த சட்டவரைபை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , புவனேக்க அளுவிகாரே, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்த்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இம்மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றன. மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி இன்று தமது உரையை முன்வைத்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் உத்தேச 20 வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்த சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒருசில சரத்துக்களினால் அரசியல் யாப்பு ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள சிந்திக்கும் சுதந்திரம் எனும் அடிப்படை உரிமைக்கு வரையறைகள் விதிக்கப்படுவதாக வலியுறுத்தினர்.

அத்துடன் பிரஜைகளுக்கு உள்ள தகவல் அறியும் உரிமைக்கும் முறையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கக்கூடிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சட்டவரைபானது நேரடியாக மக்களின் உரிமைகளுடன் முரண்படுவதனால் அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என அவர்கள் கூட்டிக்காட்டினர். 20 வது அரசியல் யாப்பு மறுசீரமைப்பு சட்டவரைபை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை ஆசிரியர் சங்கம், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், சட்டத்தரணிகள், பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 39 தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதற்கு மேலதிகமாக இச்சட்டவரைபை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்காக தலையீடு செய்து விளக்கமளிக்க அனுமதி வழங்குமாறு கோரி அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, காமினி லொக்குகே, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் , சங்கைக்குரிய ஒமாரே கஸ்ஸப்ப தேரர், எம். தயாரத்ன, டபிள்யு. எம்.டி.வீரதிலக்க, பீ.ஜி.டி அபேரத்ன ஆகியோரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க