fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய பிராந்தியத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:02

இந்திய பிராந்தியத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு

நடுநிலையான வெளிநாட்டு கொள்கையொன்றை தேர்ந்தெடுத்துள்ள இலங்கையின் முதல் நோக்கம் பயனுள்ள அபிவிருத்தி ஒருங்கிணைப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதிததாக நியமனம் பெற்ற வெளிநாட்டு தூதுவர்கள் தமது நியமன கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிததாக நியமனம் பெற்றுள்ள நான்கு தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் நியமன கடிதங்களை கையளித்தனர். கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவராக ஜொங் மூன் ஜின் தனது நியமன கடிதத்தை கையளித்தார். ஜேர்மன் சமஸ்டி குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ள ஹொல்கர் லொத்தர் சொய்பேட் ஜனாதிபதியிடம் நியமன கடிதத்தை கையளித்தார். வத்திகானின் அப்பொஸ்தலிக் நன்சியோவாக நியமனம் பெற்றுள்ள மொன்சின்யோர் துறந்தர் பிரயன் உடைவே ஆண்டகை ஜனாதிபதியிடம் நியமன கடிதத்தை கையளித்தார். இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவராக டொமினிக் பேக்லர் நியமனம் பெற்றுள்ளார்.

நியமன கடிதங்களை கையளித்த பின்னர் தூதுவர்களுடன் நட்புறவு ரீதியாக உரையாடிய ஜனாதிபதி இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் கொள்கைகளை தெளிவுப்படுத்தினார். இந்து சமுத்திர பிராந்தியம் சகல நாடுகளுக்கும் திறக்கப்பட்டு சுதந்திர வலயமாக அது மாற வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்றியமைக்க வேண்டுமென ஐந்து தசாப்தங்களுக்கு முன்னரே இலங்கை யோசனை தெரிவித்திருந்தமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தினதும் மக்களினதும் முன்னணி நோக்கம் துரித அபிவிருத்தியாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பயங்கரவாதத்தினால் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு சென்றது. துரித அபிவிருத்திக்காக வெளிநாட்டு உதவிகள் தேவைப்பட்டதாகவும் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள சீனா முன்வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் ஒன்று இடம்பெற்றது. எனினும் சிலர் இவ்வுறவை சீனாவுக்கு பக்க சார்பாக செயற்படுவதாக குறிப்பிட்டனர். இலங்கை சகல நாடுகளுடனும் நட்புறவை பேணி வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டமை கடன் சுமையில் சிக்க வைத்ததாக சிலர் கூறிய போதிலும், அந்த துறைமுகம் பாரிய அபிவிருத்தியை இலக்காக கொண்ட ஒரு திட்டம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கிய போதிலும் அது வணிக நோக்கத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய தூதுவர்கள் அங்கு ஜனாதிபதியிடம் கருத்து வெளியிடுகையில் இலங்கையின் அபிவிருத்திக்கு முழு அளவிலான பங்களிப்பை வழங்க போவதாக தெரிவித்தனர். கொவிட் 19 அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டியுள்ளனர். ஜனாதிபதிக்கு கிடைத்த பாரிய மக்கள் ஆணை குறித்து பரிசுத்த பாப்பரசர் வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரையன் உடைவே தெரிவித்தார். புவியியல் அமைவிடம், இலங்கைக்கு கிடைத்திருப்பது மிகப்பெரும் பொக்கிஷம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க