fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடவத்தையில் இருந்து மீரிகம வரை அதிவேக பாதையில் துரிதமாக செல்ல வாய்ப்பு..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:02

மத்திய அதிவேக பாதையின் நிர்மாணப்பணிகளை துரிதமாக பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடவத்த முதல் மீரிகம வரையான பகுதியில் நிர்மாணப்பணிகள் அடுத்த ஐந்து மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமென அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலேயே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தெற்கு அதிவேக பாதை கட்டுநாயக்க அதிவேக பாதை, கொழும்பு சுற்றுவட்ட பாதை ஆகியன இதன் ஊடாக நிர்மாணிக்கப்பட்டன. மத்திய அதிவேக பாதையின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கடந்த ஐந்தாண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனங்கள் காரணமாக அதன் பணிகள் சீர்குழைந்தன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கமைய நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மத்த்pய அதிவேக பாதையின் கடவத்த முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப்பணிகளுக்கான ஆரம்பகட்ட நிதியொதுக்கீடாக 14.67 பில்லியன் ரூபா ஒப்பந்த கம்பனிக்கு கடந்த 25ம் திகதி வழங்கப்பட்டது. 36.54 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட கடவத்த மீரிகம பகுதி நான்கு மருங்குகளை கொண்டதாக அமைகின்றது. அதன் அகலம் 24.4 மீட்டர்களாகும். இதற்கென 158 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அதிவேக பாதை நான்கு பிரவுகளாக அமையவுள்ளது. முதல் பகுதி கடவத்த முதல் மீரிகம வரை அமையவுள்ளது. இரண்டாம் பகுதி 40.91 கிலோ மீட்டர் கொண்ட மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி உள்ளடக்கப்படுகின்றது. பொத்துஹரவில் இருந்து கலகெதர வரையிலான 3ம் பகுதி 32.5 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டதாகும். குருநாகலில் இருந்து தம்புளை வரையிலான நான்காம் கட்டம் 60.3 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டதாகும். உடஹமுல்லையிலிருந்து மாதிவெல வரையான வீதியின் நிர்மாணப்பணிகளை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ பார்வையிட்டார்.

அடுத்து வரும் 10 நாட்களுக்குள் இவ்வீதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படும். தமது பிரச்சினைகளை துரிதமாக தீர்த்துக்கொள்ளவும் நாட்டில் துரித அபிவிருத்தி இடம்பெறுவதையும் மக்கள் விரும்புகின்றனர். இவற்றில் நாங்கள் கைவைத்துள்ளோம். இதுகுறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி ஒப்பந்தத்தை இடைநிறுத்தி நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு இதனை ஒப்படைத்தார். மத்திய நெடுஞ்சாலையின் மீரிகமயிலிருந்து குருநாகல் வரையான நிர்மாணப் பணிகள் அடுத்து வரும் 5 ம் மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும். ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர் ஒருவர் ஏற்படுத்தி ஒப்பந்தம் குறித்த பிரச்சினையே தாமத்திற்கு காரணமாகும். இதனை உடனடியாக நிறைவு செய்யுமாறு நாம் அவரை அறிவுறுத்தினோம். இது நாட்டிற்கு இழைக்க்ப்படுகின்ற பாரிய அழிவாகும். மத்திய நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் துரிதகதியில் பூர்த்திசெய்யப்படல் வேண்டும்.”

“]

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 19:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க