fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மீது குற்றப்பத்திரிகை..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2020 17:34

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அசீஸ் அல்சர்தாரி உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அரசியல் பீட உறுப்பினர்கள் பலர் மீது பாகிஸ்தான் ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களுக்கு எதிராக பண மோசடி வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரியும் அந்நாட்டின் முதலாவது முன்னாள் பிரதமரான பெனிசாரின் பூட்டோவின் கணவரும் இவர்களில் அடங்குகின்றனர். முன்னாள் ஜனாதிபதியும் ஏனைய தவறிழைத்தவர்களும் போலியாக திரட்டிய சொத்துக்களை வைப்பிலிடுவதற்காக போலி கணக்குகளை பயன்படுத்தியமை குறித்தும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் இராஜினாமா செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட முன்னர் இக்கைது இடம்பெற்றமை விசேட அம்சமாகும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2020 17:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க