ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதியை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று ஆரம்பமாகிறது. ஹோமாகம தொகுதியில் வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நிமல் லன்ஸா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடணத்தில் நாட்டில் உள்ள ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் பிரதான மார்க்கங்களுடன் ஒன்றிணையும் குறுக்கு வீதிகள் மற்றும் பிரதான வீதிகளை உடனடியாக அபிவிருத்தி செய்யுமொறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெருந்தெருக்கள் அமைச்சிடம் பொறுப்புக்களை வழங்கியுள்ளார்.
அதன் ஒரு கட்டமாகவே இன்றைய தினம் ஹோமாகாம தொகுதியில் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேவேளை இவ்வருடத்திற்குள் ஒரு தொகுதியில் 50 கிலோ மீட்டர் வீதியை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா சுட்டிக்காட்டினார்.