fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

20வது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2020 12:43

20வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் மனு ஆராயப்படுகிறது.

20வது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்த்து 39 மனுக்கல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ரட்னஜீவன் ஹூல், சட்டத்தரணிகள் மற்றும் அமைப்புக்கள் அடங்களாக பல்வேறு தரப்பினர்களின் ஊடாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை 20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்வதற்கென வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2020 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க