fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2020 15:50

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினைக்கு சமரச தீர்வை காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மேதிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோதி இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கடந்த 26 ஆம் திகதி இந்திய பிரதமருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நீண்டகாலமான நிலவிவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு இந்திய பிரதமரின் இந்த தீர்மானம் தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார். பல வருட காலமாக நிலவிவரும் இந்த பிரச்சினையில் அரசியல் விடயமும் தொடர்புபட்டிருப்பதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமாக ஹெகலிய ரம்புல்வெல்ல தெரிவித்தார்.

இந்த அத்துமீறலினால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக பிரச்சினைகள் இருந்துவருகின்றன. இதனை சுமுகமாக தீர்ப்பதற்கு இரு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்க இந்த பேச்சுவார்த்தைக்காக பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றிருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல பிரச்சினையை தீர்ப்பதற்காக இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் சந்தித்தது. அதற்கு பின்னர் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று காரணமாக இந்த குழுவின் கூட்டம் நடைபெறவில்லை.

இதனை மீண்டும் ஆரும்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இருநாட்டு பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனர்வர்களின் அத்துமீறல் குறித்த காணொளி காட்சிகளும் இந்திய பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

பிரதமர் மேதி இதனை கவனத்தில் கொண்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு அப்பாலான இந்திய அரசாங்கத்திற்கு உட்பட்ட கரையோர பாதுகாப்பு பிரிவினர் மூலம் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காரையோர பாதுகாப்பு பிரிவினர் மூலம் இதனை தடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோன்று இந்திய மீனவர்களுக்கும் பெரிய பாதிப்பு உண்டு. கூட்டு குழுவின் மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2020 15:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க