2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்
Related Articles
2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படுமென அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவிருந்தன. எனினும் கொரோனா பரவல் காரணமாக ஒருவருடத்திற்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் தற்போது வரை கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வராத நிலையில் உலக நாடுகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளன. அதற்கமைய அடுத்த வருடம் போட்டிகள் நடைபெறுமா என்கின்ற சந்தேகமும் நீடித்து வந்தது. இந்நிலையில் போட்டிகளை நடத்துவது உறுதியென ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.