தேங்காய்க்கான அதியுயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய 13 அங்குலத்தை விடவும் பெரிய தேங்காய் 70 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 13 அங்குலம் வரையான அளவைக் கொண்ட தேங்காயின் விலை 65 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 அங்குலத்திற்கும் குறைவான தேங்காய் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.