கண்டி, பூவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தின் உரிமையாளரிடம் பொலிசார் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர். குறித்த கட்டிடத்தை நிர்மாணித்த மாத்தளை பகுதியைச் சேர்ந்த கட்டிட நிர்மாண நிறுவனத்தின் உரிமையாளரிடமும் வாக்குமூலமொன்று பெறப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் கடந்த 2006ம் ஆண்டு இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டை நிர்மாணிப்பதற்கென கண்டி நகர சபையிடம் உரிய அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை, ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் இடிந்துவீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு…
படிக்க 0 நிமிடங்கள்