ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய எழுத்தாளர் , சேர்ஜை கொம்கோவ் குறித்த பரிந்துரையை செய்துள்ளார். ஜனாதிபதியின் பெயர் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில், கிரெம்ளின் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. விளாடிமிர் புட்டினின் பெயரை எழுத்தாளர் ஒருவரே பரிந்துரை செய்துள்ளார். பரிந்துரைக்கப்பட்டவர்களை கருத்திற்கொள்வதில் குறிப்பிட்ட ஒரு நடைமுறை உள்ளது. ஜனாதிபதி புட்டின் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டால் சிறப்பாக அமையும். தெரிவுசெய்யப்படாவிட்டால் எவ்வித பிரச்சினையும் இல்லையென கிரெம்ளின் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.