கொழும்பு-ஹட்டன் பிரதான வீதியின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இவ்வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிசார் கேட்டுள்ளனர்.
இவ்வீதிகளின் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. ஒருசில பகுதிகளில் ஒருவழி போக்குவரத்தே இடம்nபெறுகின்றது. அதிக மழை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் உள்ளதாலும் பனிமூட்டங்கள் காணப்படுவதாலும் வளைவுகள் நிறைந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிக அவதானமாக செயற்படுமாறு பொலிசார் கேட்டுள்ளனர். சில இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதோடு, நீர் வடிந்தோடும் கால்வாய்களும் மூடப்பட்டுள்ளனர்.