கட்டாரிலுள்ள இலங்கை தூதுரகம் இரண்டு வாரங்கள் மூடல்
Related Articles
கட்டாரிலுள்ள இலங்கை தூதுரகம் இரண்டு வாரங்கள் மூடப்பட்டுள்ளன. தூதரக ஊழியர் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகியமையே இதற்கு காரணமாகும்.
தூதரகத்தின் ஏனைய ஊழியர் குழாம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலமையின் போது கொன்சியுலர் சேவைக்காக 74 703 413 அல்லது தொழில் மற்றும் நலன்புரி சேவைகளுக்காக 70 088 771 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்கள் 14 பேர் புதிதாக இனங்காணப்பட்டனர். இவர்களில் கந்தகாடு போதைப்பொருள் தடுப்பு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்புபட்ட ஒருவரும் அடங்குகின்றார்.
ஏனைய 13 பேரும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியா , குவைத் , இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள்.