fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

IPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2020 12:32

IPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…

ஐ.பி.எல் கிரிக்கட் தொடரின் 4வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சார்ஜாவில் இடம்பெற்றது. சென்னை அணி மஹேந்திர சிங் தோனி தலைமையிலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலும் களமிறங்கியிருந்தனர்.

நாணய சுழற்யிசில் வென்ற சென்னை சுபர்கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்றது. சஞ்சு சம்சன் 76 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் சேம்குரேன் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். அதற்கமைய 217 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பகிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை மாத்தரமே பெற்றது. பெப் டூ பிலெஸிஸ் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ராகுல் தெவட்டியா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். அதற்கமைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்ட நாயகனாக சஞ்சு சம்சன் தெரிவானார்.

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் அபுதாபியில் இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2020 12:32

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க