fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடுகளின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் தலையிடாதென தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2020 13:05

நாடுகளின் உள் விவகார நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகள் ஸ்ததாபனம் தலையிடாதென நாம் நம்புகிறோம் என ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உயர் மட்ட ஒருநாள் மாநாட்டில் வீடியோ தொழிநுட்பட்பம் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

“கொவிட் 19 பரவல் நாடுகளின் பொருளாதாரத்தையும் சுகாதார தொகுதியையும் பாதித்து உலகளாவிய ரீதியில் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த தலையிடு காரணமாக கொவிட் 19 சவாலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடிந்துள்ளது. இலங்கை முதலாவது நோயாளியை இனம்காண்பதற்கு முன்னர் கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு குழுவை நியமித்தது. சுகாதார மற்றும் பாதுகாப்புதுறை , தேசிய பிராந்திய மட்டத்திலான சிவில் அதிகார சபை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் குணமடைவதும் உலகளாவிய ரீதியில் உயர் விகிதாசாரத்தில் காணப்படுகின்றது. இனங்காணுதல் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இதன் வெற்றிக்கு பாரிய சக்தியாக காணப்பட்டாது. கடந்த ஒரு மாதத்திற்கும் கூடுதலான காலப்பகுதிக்குள் எவ்வித கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இனங்காணப்படவில்லை. நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் 2030 ஐ வெற்றி கொள்வதற்காக இலங்கை அர்ப்பணிப்பு செய்துள்ளது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தின் ஊடாக வறுமையை ஒழித்துக்கட்டுவதே தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். இறக்குமதிகள் மீது வரையறைகளை விதித்தல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் எடுத்த செயற்பாடுகள் போன்றவற்றின் மூலம் எதிர்பார்த்த இலக்கை எட்டமுடிந்தது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை பலப்படுத்துவதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் அதன் உறுப்பு நாடுகளான எமது எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு வழிவகுக்குமென நம்புகிறோம். மக்களுக்கும் எதிர்கால சந்தத்தியினருக்கும் அதன் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தயாராகவுள்ளோம். “

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2020 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க