தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக மவுஸ்ஸாகல, லக்ஸபான, கெனியோன், விமலசுரேந்திர நவலலக்ஸபான, கொள்பிட்டிய, காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
ஒரு சில நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலையை எட்டியுள்ளன. இந்நிலையில், தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.