சட்டவிரோதமாக 33 ஆயிரம் கிலோகிரேம் மஞ்சள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுங்க திணைக்களத்திலிருந்து மஞ்சள் தொகையை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியமை தொடர்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 33 ஆயிரம் கிலோகிரேம் மஞ்சளுடன் 3 கொள்கலன் வாகனங்களும், மூவாயிரம் கிலோ கிரேம் உளுந்து தொகையுடன் 7 லொறிகளும் நேற்று பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் 10 பேர் புளுமென்டல் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த சட்டவிரோதப் பொருட்கள் டுபாயிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மட்டக்குளி பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரினால், குறித்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.