fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மானிப்பாய் பகுதியில் வயல் ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2020 13:03

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் உள்ள வயல் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முதியவரே இவ்வாறு சடலமாக கண்டிடெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். எனினும் அவரை காண்டுப்பிடிக்க முடியாத நிலையில் வயல் வழியாக சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் குறித்த வயோதிபர் விழுந்து கிடப்பதை கண்ணுற்றுள்ளார்.

அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வயல் நிலத்தில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2020 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க