fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சைபர் ரேக்கிங் : சிரேஸ்ட மாணவர்களுக்கு ஈவிரமிக்கின்றி தண்டனை வழங்கப்படும் என்கிறார் துணைவேந்தர்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2020 17:36

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது இம்சை மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரமிக்கின்றி தண்டிக்கப்படுவார்கள் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி. ஸ்ரீ சக்குண ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய இம்சை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 4 சிரேஸ்ட மாணவர்களால் புதுமுக மாணவர்களை பாலியல் ரீதியாக இம்சிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் ரேக்கிங் தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே இச்செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2020 17:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க