fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘உங்களுக்கு வீடு, நாட்டுக்கு நாளை’ திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2020 14:51

‘உங்களுக்கு வீடு, நாட்டுக்கு நாளை’ திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. சகல கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளடங்கும் விதத்தில் 14 ஆயிரத்து 22 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இந்திக அநுருந்த தெரிவித்துள்ளார். திட்டத்தினூடாக எதிர்வரும் 5 வருட காலப்பகுதிக்குள் 70 ஆயிரத்து 100 வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 5ம் திகதி உலக வீட்டுத் தினத்தை முன்னிட்டு, ஆயிரத்து 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வெள்ளவத்தை, மிஹிதுபுர, பரன்கியாகும்புர, மத்தேகொட, சொய்சாபுர போன்ற நகரங்களை மையப்படுத்தி நவீன தொடர்மாடி வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ராஜாங்க அமைச்சர் இந்திக அநுருந்த தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2020 14:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க