fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

14 நாட்கள் பூர்த்தியாகும் இருபதின் வர்த்தமானியை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைக்க திட்டம்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2020 19:21

20 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் பூர்த்தியாகின்றன.

இதன் அடிப்படையில் இன்று முதல் எந்த சந்தர்ப்பத்திலும் அதனை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உட்படுத்த முடியும். உத்தேச 20 வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டதுடன் நேற்றையதினம் அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் அவ்வாறு சமர்ப்பிக்கப்படவில்லை.

20 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் இடம்பெறும் பல மாற்றங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்விருந்த சந்தர்ப்பம், 20 வது சீர்திருத்தத்தினால் ரத்துச்செய்யப்பட்ட போதிலும் நீதிமன்றத்தில் ஜனாதிபதி பிரதிவாதி தாக்கல் செய்த அடிப்படை மனுவை விசாரித்து முடிப்பதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கணக்காய்வு ஆணைக்குழுவை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், கணக்காய்வாளரின் கணக்காய்வு அதிகாரத்திற்கு உட்படுத்த 20 வது சீர்திருத்தம் மூலம் இணக்கம் காணப்பட்டுள்ளது. கம்பனி சட்டத்தின் கீழ் அவற்றை கணக்காய்வு செய்வதற்கு கணக்காய்வாளர்க்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அமைச்சரவை உறுப்பினர்கள் 30 ஆகவும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் 40 பேராகவும் வரையறுப்பதற்கு 19 வது சீர்திருத்தத்தின் ஊடாக விதிக்கப்பட்டுள்ள வரையறையை அதே விதமாக முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ள்து.

அமைச்சரவை சத்திப்பிரமாணம் செய்யும் போது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக முன்னிருந்த சட்டத்தை சீர்திருத்தாமல் முன்னெடுத்து செல்வதற்கு இணக்கம் காணப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிப்பதற்கும், அதன் கோரத்தை 3 உறுப்பினர்களாக மாற்றுவதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அவசர சட்டங்களை முன்வைப்பதற்கு 20 வது அரசியல் அமைப்பு சீர்திருத்ததில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நீக்குவதற்கும் ஏதேனும் சட்டங்கள் தொடர்பாக அதன் யாப்பு ரீதியான தன்மையை பரிசீலிப்பதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் 7 நாட்களிலிருந்து 14 நாட்களாக நீடிப்பதற்கும் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு மட்டும் பொருந்தக்கூடிய வகையில் இரட்டை பிரஜாயுரிமையின் தடையை முன்னெடுத்து செல்வதற்கும் குழு இணங்கியுள்ளது. பொதுமக்கள் பொலிசாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கும் முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு அவ் ஆணைக்குழுவிற்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் கிடைப்பதாகவும், பொலிசாரின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை அரச சேவை ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவருவதற்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதி சேவை ஆணைக்குழுவில் சிரேஸ்ட தொழில்சார் நீதியரசர் ஒருவரை இணைத்துக்கொள்வதற்கும் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2020 19:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க