பண்டாரகம அட்டுலுகம பகுதியில் போதைப் பொருள் வர்த்தகத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்ளிட்ட 5 பேர் பலங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இப்பகுதியில் இருந்து தப்பிச்சென்று மறைந்திருந்த பெண் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களும் பலங்கொட கல்தொட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்னடர். கல்தொட்ட தங்ஜன்தென்ன பகுதியில் இச்சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிசாருக்கு தகவல்கள் கிடைத்தன.
இதற்கு அமைய குறித்த இடத்துக்கு பொலிசார் சென்ற போது அவ்வ்pடத்தில் இருந்து சந்தேகநபர்கள் தப்பிச்செல்ல முயற்சித்த போதிலும் துரிதமாக செயற்பட்ட பொலிசார் அவர்களை கைது செய்தனர். சந்தேகநபர்கள் பலாங்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.