fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேராதனை மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களில் ஏற்பட்ட பகிடிவதை தொடர்பில் தீவிர விசாரணை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2020 13:06

பேராதனை மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களில் ஏற்பட்ட பகிடிவதை தொடர்பில் தீவிர விசாரணை

பேராதனை மற்றும் யாழ்பாணம் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் முதலாம் தர மாணவிகள் சிலரிடம் பாலியல் ரீதியான காட்சிகளை ஒளிப்பதிவு செய்து அனுப்புமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர். இதுவரை யாழ் பல்கலைக்கழகத்தில் எவ்வித பீடங்களும் மூடப்படவில்லை. பல்கலைக்கழக நிறுவாகத்துடன் கலந்துரையாடி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அதேபோல் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை தொடர்பில் மாணவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பெற்றோர் வழங்கிய முறைப்பாடுக்கமைய பேராதெனிய பல்கலைக்கழக பொறியியல் பீட 2ம் வருட மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2020 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க