fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2020 12:58

கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….

கொரோனா பாதிப்பால் கால்பந்து உலகில் நூற்று இருபது மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கழக போட்டிகள் மற்றும் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் இதனூடாக கிடைக்கும் வறுமானம் இழக்கபெற்றுள்ளதாக உலக கால்பந்தாட்ட சம்மேளனமான பீபா தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக கழக மற்றும் சர்வதேச ரீதியலான கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெறவில்லை. தற்போது படிப்படியாக போட்டிகள் ஆரம்பிக்கப்படடிருந்தாலும் இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இதனால் கால்பந்து போட்டிகள் மூலம் கிடைக்கும் வறுமானத்தில் சுமார் நூற்று இருபது மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பீபா சுட்டிக்காட்டியுள்ளது. வருடம் ஒன்றுக்கு கழக போட்டிகள் ஊடாக மாத்திரம் சுமார் 300 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானம் கிடைக்குமென பீபா அமைப்பு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2020 12:58

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க